Random image

மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது: நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்:

திர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

பாஜக கூட்டணி கட்சியான பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தது. ஆனாலும், பாஜகவுக்கு ஆதரவாகவே நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அமைக்கும்  மகா கூட்டணியில் பிஜு-ஜனதாதளம் இணையாது  என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  மகா கூட்டணி உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியில் அமையும் மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது. எங்கள் கட்சி எப்போதும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சற்று இடைவெளி விட்டு தான் செயல்படும். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.