புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக, பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய பாஜக எம்பி திலீப் கோஷ், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஜனநாயகம் ஆட்டம் காணுகிறது.

மேற்கு வங்க முதல்வருக்கு பிரதமராக விருப்பம் உள்ளது. மேற்கு வங்காளத்தையும், பங்களாதேஷையும் இணைத்து மேற்கு பங்களாதேஷாக்க மம்தா முயற்சிக்கிறார்.

இந்தியாவிலிருந்து மேற்கு வங்கத்தை பிரித்துக் கொண்டு போக சதி நடக்கிறது.

நாங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டால், மம்தா ஜெய் பங்களா என்று கோஷமிடுகிறார். ஜெய் ஸ்ரீராம் என்பது எங்கள் கோஷம். ஜெய் பங்களா என்பது பங்களாதேஷிலிருந்து வந்த கோஷம் என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமதான் கலவரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.