புதியஅரசு அமைக்க தீவிரம்: இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி

டில்லி:

தேர்தல் வெற்றியை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்கும் வகையில்,  இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

லோக்சபா தேர்தல் முடிவடைந்தநிலையில், பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியே ஏற்பட உள்ளது.

இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய 16வது மக்களவையை கலைக்க பரிந்துரைக்கும் வகையில்,  தீர்மானம்   இயற்றப்பட்டு ஜனாதிபதிக்கு  அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து  பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நிலையில், ஆட்சி அமைக்க   உரிமை கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.