ஒரத்தநாட்டில் முதியவர் கொல்லப்பட்டதில் அரசியல் பின்னணி இல்லை: போலீஸார் தகவல்

 தஞ்சாவூர்:

ஒரத்தநாட்டில் 75 வயது முதியவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் அரசியல் ஏதும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, அரசியல் தொடர்பாக எழுந்த விவாதத்தில் மோடியின் ஆதரவாளரான 75 வயது கோவிந்தராஜன் கொல்லப்பட்டதாக பாஜக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதில் எவ்வித ஆதாரமும் இல்லை.

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரத்தநாட்டில் ஓட்டுநர் கோபிநாத் என்பவருடன் கோவிந்தராஜன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோவிந்தராஜனை ஓட்டுநர் கோபிநாத் தாக்கியுள்ளார்.

 

அதன்பின்னர் வீட்டுக்குச் சென்ற முதியவர் உணவு சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர்தான் இறந்துள்ளார். அடித்த ஓட்டுநர் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளர் என்பது தவறு. இது தொடர்பாக கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

முதியவர் கோவிந்தராஜன் எல்லா தலைவர்களின் படத்தையும் கழுத்தில் மாட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த கட்சியையும் சாராதவர் என்றனர்.

 

You may have missed