மக்களவை தேர்தல் :  பாஜகவின் கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஆதரவு

னாஜி

பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ்ட்ர கோமாந்தக் கட்சி மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கிறது.

பாஜகவும் மகாராஷ்டிர கோமந்தக் கட்சியும் கோவா மாநில கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தன.   கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணத்துக்கு பிறகு பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி ஏற்றார்.   அப்போது ம கோ க வின் தலைவர் சுதின் தாவலிகர் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

கோவா சட்டப்பேரவையில் ம கோ க வின் மூன்று உறுப்பினர்களில் இருவரை பாஜக தன் பக்கம் இழுத்தது.     கட்சித் தாவல் சட்டப்படி மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் கட்சி மாறும் போது அவரக்ளை தகுதி நீக்கம் செய்ய முடியாது.  அதனால் அவர்கள் பதவி தப்பியது.  அப்போது துணை முதல்வராக இருந்த சுதின் தாவலிகர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அன்று முதல் இரு கட்சிகளுக்கும் இடையில் பகை இருந்து வருகிறது.   நடைபெற உள்ள மக்களவை தேர்தஒல் ம கோ க தனது ஆதரவு குறித்து கட்சியின் மத்தியக் குழு நேற்று கூடி கலந்தாய்வு நடத்தியது.   அதன் முடிவில் மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி தனது ஆதரவை காங்கிரசுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது/.