Random image

யோகி கூட்டத்துக்கு வர மறுத்த கூட்டணி கட்சித்தலைவி : உ. பி யில் பரபரப்பு

டியொரியா, உத்திரப்பிரதேசம்

பாஜகவின் கூட்டணிக கட்சி தலைவி அனுப்ரியா படேல் உ.பி. முதல்வர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுடன் மாநிலக் கட்சியான அப்னா தள் (எஸ்) கட்சியின் தலைவி அனுப்ரியா படேல். இந்தக் கட்சி கடந்த 2014 ஆம் வருட மக்களைவை தேர்தலில் இரு இடங்களில் போட்டியிட்டது. இரு இடங்களிலும் இந்தக் கட்சி வெற்றி பெற்றாது. அக்கட்சியின் தலைவி அனுப்ரியா படேல் மிர்சாப்பூர் தொகுதியிலும், ஹரிவன்ஷ் சிங் பிரதாப்கர் தொகுதியிலும் வென்றனர். அனுப்ரியா படேல் மத்திய அமைச்சரவையின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பில் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உபேந்திர குஷ்வாலா தலைமையில் உள்ள ராஷ்டிரிய லோக் சமதா கட்சி பாஜகவில் இருந்து விலகியது. அப்போது அனுப்ரியா படேல் பாஜக வின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அக்கட்சி விலகியதாக வருத்தம் தெரிவித்தார். அதே போல் தெலுங்கு தேசம் கட்சியின் பாஜகவின் பிடிவாதமான போக்கினால் கூட்டணியில் இருந்து விலகியதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சிறிய கூட்டணிக் கட்சிகளை பாஜக தலைவர்கள் மதிப்பதில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று டியொரியா மற்றும் சித்தார்த் நகர் ஆகிய இரு இடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் அனுப்ரியா படேல் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் புகைப்படங்கள் அடங்கிய பானர்களும் பல இடங்களில் இருந்தன.

ஆனால் இந்த நிகழ்வில் அனுப்ரியா படேல் கலந்துக் கொள்ளவில்லை. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அனுராக் படேல், “எங்கள்  கட்சி தலைவி அனுப்ரியாவுக்கு இந்த இரு நிகழ்வுகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அதனால் அவர் இந்த இரு விழாக்களிலும் கலந்துக் கொள்ள மறுத்து விட்டார். பாஜக தனது சிறிய கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில்லை என்பது தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.