அதிமுக வும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் : அதிமுக நாளேட்டில் செய்தி

சென்னை

திமுக நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா ஒரு செய்தியில் அதிமுக வும் பாஜக வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என குறிப்பிட்டுள்ளது.

அதிமுக வின் அதிகாரபூர்வ நாளேடு ‘நமது புரட்சித் தலைவி அம்மா’.   இந்த நாளேட்டில் கட்டுரை வடிவ செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், “எதிரிக்கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றன.   அவை அனைத்தும் மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஆகும்.    எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டம் நடத்தினாலும்  அதிமுக மற்றும் பாஜக உடன் ஆன உறவை பிரிக்க இயலாது.   இந்த இரு கட்சிகளும் இந்திய அரசியலில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட தொடங்கி விட்டன.   இது காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல தற்போதைய தேவையும் கூட.

தற்போதுள்ள நிலையில் தமிழகத்தின் எதிர்காலத்துக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல் பட வேண்டிய அவசியம் உள்ளது.     காவிரி மேலாண்மை வாரியத்தை பஜக அரசு நிச்சயம் அமைக்கும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.   அந்த நம்பிக்கையுடன் நாங்கள் பாஜகவுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம்.    நமது பிரதமர் மோடியை இந்த உலகே வியந்து பார்க்கிறது.   அப்பேற்பட்டவருக்கு எதிர்க் கட்சிகள் களங்கம் ஏற்படுத்துவதை மன்னிக்க முடியாது.

பிரதமர் சமீபத்தில் இங்கு வந்த போது கருப்புக் கொடி காட்டப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன.   அனால் அவர் கண்களுக்கு முன்பு ஒரு கருப்புக் கொடியைக் கூட எதிர்க்க்கட்சிகளால் காட்ட இயலவில்லை.   தமிழக அரசின் ராஜ தந்திரத்துக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என குறிப்பிடப்பட்டுள்ளது.