முகநூலை கட்டுப்படுத்தும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் : ராகுல் காந்தி

டில்லி

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இந்தியாவில் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

அரசியல் கட்சிகள் முகநூல், வாட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் தங்கள் கட்சி தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புக்கள் சமூக வலைத் தளங்களில் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகின்றன

அமெரிக்க ஊடகங்கள் இது குறித்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில்

“பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இந்தியாவில் சமூக வலைத் தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றை கட்டுப்படுத்தி உள்ளன.

வாக்காளர்களிடம் அவர்கள் அவற்றின் மூலம் போலி செய்திகளையும் வெறுப்புணர்வையும் பரப்பி வருகின்றனர்.

இது தொடர்பான உண்மைகளை அமெரிக்க ஊடகங்கள் இறுதியாகச் செய்தியாக வெளிப்படுத்தி உள்ளன.”

என தெரிவித்துள்ளார்.