பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு!

--

டில்லி,

பீகார் மாநில ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாரதியஜனதா அறிவித்து உள்ளது.

இன்று காலை கூடிய பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து பீகார் மாநில ஆளுநகர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை பாரதியஜனதா தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாரதியஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா இதை தெரிவித்துள்ளார்.