கர்நாடகா மேலவை உறுப்பினராக ஆப்பிரிக்கரை நியமனம் செய்த பாஜக

--

பெங்களூரு

ர்நாடக மாநில மேலவை உறுப்பினராக சாந்தாராம புத்னா சித்தி என்னும் ஆப்பிரிக்கரை பாஜக நியமித்துள்ளது.

கர்நாடகாவில் உத்தர கர்நாடகாவில் ஆப்ரிக்க பழங்குடியினரான சித்தி இனத்தவர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நில உரிமை வழங்கப்படாததால் மிகவும் துயருற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இனத்தைச் சேர்ந்த சாந்தாராம புத்னா சித்தி என்பவரை பாஜக மேலவை உறுப்பினராக நியமித்துள்ளது.

இவருக்கு தற்போது 55 வயதாகிறது.

இவர் சித்தி இனத்தைச் சேர்ந்த முதல் சட் டப்பேரவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.