டில்லி:

த்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே அரசமைக்கும் என்று டைம்ஸ் நவ் சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு மற்றும் நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ், ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத்  பொன்ற ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

17வது மக்களவை கட்டமைப்பதற்கான லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் உள்ள   543 தொகுதி களுக்கு, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து 7கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது.

பணப்பட்டுவாடா காரணமாக தமிழகத்தின் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளும் வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. இன்று கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததாக தேர்தல்ஆணையம் அறிவித்து உள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை அல்லது 24ந்தேதி வாக்கு முடிவுகள் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி  அரசியல் களத்தை மேலும் சூடுபறக்க வைத்துள்ளது.

மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் உள்பட 3வது அணியும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக தேர்தல் வியூங்களை வகுத்து தேர்தல் பிசாரங்களை முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில், பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு:

பாஜக கூட்டணிக்கு  306 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி 132 இடங்கள் 

இதர கட்சிகள் 104 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளது.

நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி 298 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி 118  இடங்கள்

 இதர கட்சிகள் 126 தொகுதிகள் 

இதன் காரணமாக பாஜகமே மீண்டும் அரியணை ஏறும் என்றும் தெரிவித்து உள்ளது.

ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி  287 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி 128 இடங்கள்

இதர கட்சிகள் 127 தொகுதிகள்

மேலும் பல்வேறு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.