பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆய்வு செய்யும் விவகாரம்: ஒருமித்த கருத்தை எட்ட முடியாத பொதுக் கணக்குக் குழு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து நிதி பெற கடந்த மார்ச் 28-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது `பிஎம் கேர்ஸ்’என்ற நிதியம்.

பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும் போது இது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று பெரும் சர்ச்சைகள் எழுந்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

பொது கணக்குக் குழுவில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக் கணக்குக் குழுவில் பாஜக பெரும்பான்மையையை பெற்றுள்ளது.

இந்த குழுவானது, கொரோனா தொடர்பான பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆராய்கிறது. இப்போது பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற சவுத்ரியின் முயற்சியை இந்த குழு இப்போது தடுத்துள்ளது.

குழுவில், பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு பிஜூ ஜனதா தள தலைவர் பார்துஹரி மஹ்தானியிடமிருந்து வந்தது. கூட்டத்தில் திமுகவின் டிஆர் பாலு இந்த முன்மொழிவை ஆதரித்தவர்களில் ஒருவர். கூட்டத்தில் ஆதரவை விட எதிர்ப்பு அதிகமாக இருந்தது.

பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. முன்னதாக பிஎம் கேர்ஸ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அதை குழுவால் விசாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.