பூரி

பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ உஜ்வாலா திட்டம் என்னும் இலவச எரிவாயு திட்டத் தோல்வியை காட்டுவதாக சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரதமர் மோடி உஜ்வாலா திட்டம் என்னும் இலவச எரிவாயு திட்டத்தை தனது கனவு திட்டமாக அறிவித்து வருகிறார். நேற்று ஒரிசாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் மோடி, “நான் சிறுவனாக இருந்த போது என் தாய் சமைக்கும்போது புகையில் வாடியதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அத்துடன் அந்த புகையால் நாங்கள் துயருறுவது கூடாது எனவும் முயற்சி செய்துள்ளார். அதனால் நான் 40 லட்சம் தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச எரிவாயு அளித்தேன்” என கூறினார்.

ஒரிசாவின் பூரி தொகுதியின் மக்களவை வேட்பாளரும் பாஜக செய்தி தொடர்பாளருமான சம்பித் பாத்ரா ஒரு வீடியோ பதிவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தப் பெண்மணி பூரி அருகில் உள்ள சிற்றூரில் வசித்து வரும் ஏழை விதவை ஆவார். இவருக்கு உடல் ஊனமுற்ற இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பிரதமர் உதவியால் இவருக்கு ஒரு வீடு கிடைத்துள்ளது.

இது எனது சொந்த குடும்பம் ஆகும். அந்த தாய் எனக்கு உணவு சமைத்து பரிமாறினார். நானும் அவருக்கு எனது கைகளால் உணவளித்தேன். இந்த தாய்க்கு நான் பணி புரிவதை கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய பிரார்த்தனையாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பாத்ரா ஒரு வாழை இலையில் சாப்பிடுகிறார். அந்த பெண்மணி விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளரான பிரசாந்த் குமார், “உஜ்வாலா திட்டம் வெற்றி அடைந்து ஒவ்வொரு ஏழைத் தாயும் ஏழை சகோதரியும் தங்கள் இல்லத்தில் எரிவாயு சிலிண்டர் அளிக்கப்பட்டுள்ளதாக நமக்கு தெரிவித்தார்களே. அது உண்மைதானே? ஆனால் இந்த வீட்டில் காலி சிலிண்டர் கூட தென்படவில்லையே. ஏன்?” என பதிந்துள்ளார்

https://twitter.com/scribe_prashant/status/1112255819675062272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1112255819675062272&ref_url=http%3A%2F%2Fwww.jantakareporter.com%2Fentertainment%2Fongc-director-sambit-patra-seen-sharing-meal-embarrassingly-cooked-on-firewood-day-after-modi-claims-success-of-ujjwala-yojna%2F239388%2F

இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு சம்பித் பாத்ரா வீடியோ தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.