ஆயுள் தண்டனை பெற்ற பசு பாதுகாவலர்களுக்கு மத்திய அமைச்சர் மரியாதை….காங்கிரஸ் கண்டனம்

ராய்பூர்:

இஸ்லாமிய இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆனவர்களுக்கு மத்திய அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி அல்முதீன் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரி கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் இந்த கெ £டூரச் செயலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்த்து கடந்த மார்ச்சில் தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டனை பெற்றவர்களில் 8 பேர் ஜ £மீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பாஜக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை அளித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

ஜெயந்த் சின்ஹா ஹாசாரிபாக் தொகுதியை சேர்ந்தவர். இது போன்று மதிப்பளிப்பது மிகவும் மோசமானது. இது தான் பா.ஜ.க.வின் உண்மையான முகம். தேர்தலில் வெற்றிப் பெற எத்தகைய எல்லையையும் அவர்கள் மீறுவார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.