னாஜி

னது தந்தையின் மறைவுக்கு பிறகு பாஜக தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளதாக மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி அன்று மரணம் அடைந்தார்.   அவருடைய தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் அவர் மகன் உத்பல் பாரிக்கருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அவருக்கு பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்அடான்சியோ மான்செரெட் வெற்றி பெற்றார்.

நேற்று முன் தினம், காங்கிரசை சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.  இதில் அடான்சியோவும் ஒருவர் ஆவார்.    இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.   மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “எனது தந்தை மனோகர் பாரிக்கர் உயிருடன் இருந்த காலத்தில் பாஜக நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை முக்கிய கொள்கைகளாக கொண்டிருந்தது.  ஆனால் தற்போது பாஜக தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.   இது சரியானதா என்பதை காலம் தான் கூற வேண்டும்.

நான் பாஜகவில் தொடர்ந்து  மூத்த தலைவர்களுக்கு உதவி புரிய உள்ளேன்.   அடான்சியோ கட்சியில் சேர்ந்தது குறித்து தொண்டர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.   இன்னும் இரு வருடங்களில் அவர் எங்கு இருப்பார் என்பது அவருக்கே தெரியாது.” என தெரிவித்துள்ளார்.