டில்லியில் நாளை மோடி தலைமையில் பாஜக முதல்வர்கள் கூட்டம்

டில்லி:

டில்லியில் நாளை மோடி தலைமையில் பாஜக முதல்வர்கள் கூட்டம் நடக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சாலப் பிரதேசம், ஜார்கண்ட், காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா. மணிப்பூர். ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேலும் பீகார், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆதரவுடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் முதல்வர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பாஜக முதல்வர்கள் கூட்டம் நாளை பிரதமர் மோடி தலைமையில் டில்லியல் நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.