தொழிலாளர்களை  அலற விட்ட  பா.ஜ.க. முதல்வர் ..

தொழிலாளர்களை  அலற விட்ட  பா.ஜ.க. முதல்வர் ..

 12 மணி நேர வேலைத்திட்டத்தை அமல் படுத்தப்போவதாக பா.ஜ.க.முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்து ஓடாய் தேய்ந்தனர்.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேலை நேரம் 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதும் ,அதனை மே தினமாகத் தொழிலாளர்கள் கொண்டாடிவருவதும் தெரிந்த விஷயம்.

இந்த நிலையில் ,மீண்டும் வரலாற்றைத் திருப்பும் முயற்சியில் பா.ஜ.க. முதல்வர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல.

40 நாட்களுக்கு முன் மத்தியப்பிரதேச மாநிலத்தில்  காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, மீண்டும் முதல்வர் பதவியைப் பிடித்துள்ள, சிவராஜ் சிங் சவுகான் தான்.

‘’இந்த நெருக்கடியான கால கட்டத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை  மாற்ற வேண்டும். இப்போது வேலைநேரம் 8 மணி நேரமாக உள்ளது.

இதனை 10 அல்லது 12 மணி நேரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். வேலைக்கு ஏற்ற கூலி. தொழிலாளர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும், ஆலைகளின் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.’’ என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார், சவுகான்.

’’விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இனி சந்தைக்குப் போக வேண்டாம். அவர்களைத் தேடி வியாபாரிகள் வருவார்கள்’’ என்றும் சவுகான், தெரிவித்துள்ளார்.

 

– ஏழுமலை வெங்கடேசன்