பாஜக கூட்டணி விஷம் குடித்தது போல் இருந்தது…மெஹபூபா முப்தி ஆதங்கம்

--

ஸ்ரீநகர்:

பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் காஷ்மீர் முதல்வர் பதவியை இழந்த மெகபூபா முப்தி ஒரு பொதுக்கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ துவக்கத்தில் இருந்தே பாஜகவுடனான கூட்டணியில் எனக்கு அதிருப்தி இருந்தது. எனது தந்தையிடம்இது பற்றி நான் கூறிய போதும், எனது கருத்தை ஏற்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்தார். இருப்பினும் அது மிக மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தின் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செய்ய பாஜக விடவில்லை. மாநிலத்தில் அமைதியை திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை.

ஒரு கோப்பை விஷத்தை குடித்தது போலவே கூட்டணி அரசு இருந்தது. பாகிஸ்தானுடனான நல்லுறவு, காஷ்மீருக்கு சிறப்பு பொருளாதார திட்டம் என எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. திறந்த மனதுடன் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதை மத்திய அரசு ஏற்க வேண்டும்’’என்றார்.