ராம் ரஹீம் – ஹனி

த்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலாத்கார சாமியார் ராம்ரஹீமின் மகள் ஹனி பிரீத், பாஜக மீது புகார் தெரிவித்து பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த ராம் ரஹீம் சாமியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு கடந்த 2002ம் ஆண்டு பதியப்பட்டது. அதன் பிறகு நீண்ட நாட்களாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பிறகு சற்று நேரத்துக்கு முன்பு,  அவருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல்  சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. . அரியானா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெஹ்தீப் சிங் இந்த உத்தரவை வழங்கினார்.

இதற்கிடையே சாமியார் ராம்ரஹீமின் மகள், பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர், “கடந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலின் போது மாநில பாஜகவினர் எங்களை அணுகினர். பாபாவின் மீதான பலாத்கார வழக்கில் தண்டனை பெறாமல் இருக்க உதவுவதாகவும் அதற்கு பிரதிபலனாக தேர்தலில் பாஜகவுக்கு பாபா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரினர். அதன்படி கடந்த தேர்தலில் பாஜகவை பாபா ஆதரித்தார். இதனால்தான் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சொன்னபடி செய்ய பாஜக மறுத்துவிட்டது” என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.