இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் முடியாத பிரிவினையை பாஜக செய்துவிட்டது!! கெஜ்ரிவால்

டில்லி:

கடந்த 60 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஐஎஸ்ஐஎஸ் பயங்கராவத அமைப்புகள் செய்யாத பிரிவினையை பாஜக 3 ஆண்டுகளில் செய்துவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ராமலீலா மைதானத்தில் நடந்த ஆம்ஆத்மி தேசிய மாநாட்டில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில். ‘‘ இந்துஸ்தானை இந்து, முஸ்லிம் என்ற பெயரில் பிரிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் மிகப் பெரிய கனவாகும். இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பார்வையில் நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஏஜென்ட்கள்.

தேச விரோதி என்ற பெயரில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து நாட்டை பலவீனமாக்கும் செயலை பாஜக கடந்த 3 ஆண்டுகளில் செய்துள்ளது. இது பாகிஸ்தானின் கனவு. 60 ஆண்டுகளாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் இதை செய்ய முடியவில்லை’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.