மோடி அரசு ஐந்து வருடங்களாக எதையும் செய்யவில்லை : ப சிதம்பரம்

டில்லி

மோடி அரசு ஐந்து வருடங்களாக எதுவும் செய்யவில்லை என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றன. குறிப்பாக பாஜக தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நினைவு படுத்தி அவைகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம், “பாஜக ஏராளமான வாக்குறுதிகளை அளித்து விட்டு ஆட்சி அமைத்தது. அதில் முக்கியமானவை வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் மக்களின் வங்கிக் கணக்கில் பணம் போடுவதும் ஆகும். ஆனால் அதை நிறைவேற்றாமல் பெரிய சிலைகள், கோவில்கள் போன்றவை அமைக்கப் போவதாக பாஜக அரசு கூறி வருகிறது.

மோடி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஐந்து வருடங்கள் ஆகும் இந்த வேளையிலும் நிறைவேற்றவில்லை. தற்போது புதிய வாக்குறுதிகளாக பிரம்மாண்டமான சிலைகள் மற்றும் கோவில்கள் அமைக்க போவதாக தெரிவித்து வருகின்றன. முந்தைய வாக்குறுதிகளின் நிலையே இவற்றுக்கும் ஏற்படும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.