தமிழக வாக்குகளால் பாஜக ஆட்சிக்கு வரவில்லை : எச் ராஜா சர்ச்சை பேச்சு

கோயம்புத்தூர்

மிழக மக்கள் வாக்களித்து பாஜக ஆட்சிக்கு வரவில்லை என செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மிகவும் சோதனையை சந்தித்தன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை பிரதமர் மோடி சந்திக்காதது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி பிரதமர் என்னும் முறையில் ஆறுதல் செய்தி கூட சொல்லாததால் அவர் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் அதை பாஜக தலைவர்கள் மறுத்துள்ளனர். தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக தமிழக பாஜக தலிவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி தமிழ்நாடு வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விக்கு எச் ராஜா நேரடியாக பதில் அளிக்கவில்லை.

கருணாநிதி சிலை திறப்புக்கு சோனியா காந்தி வந்தது குறித்தும் ராகுல் காந்தியை பற்றியும் எச் ராஜா பேசிக் கொண்டிருந்தார். அதர்ற்கு செய்தியாளர் ஒருவர், “அப்போது காங்கிரஸ் ஆட்சி சரி இல்லாததால் தான் உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதனால் உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?“ என கேட்டார்

இந்த கேள்விக்கு எச் ராஜா உடனடியாக தமிழக மக்கள் வாக்களித்து பாஜக ஆட்சிக்கு வரவில்லை என பதில் அளித்தார். இந்த பதில் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed