சென்னை: தமிழகத்தில் இதுவரை தேர்தலின்போது அதிமுக, திமுக இடையேதான் போட்டி இருந்து வந்த நிலையில், இனி வரும் தேர்தலில்  பாஜக – திமுக இடையேதான் போட்டி இருதுக்கும் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள்  திமுக பிரமுகர் வி.பி.துரைசாமி  கூறி உள்ளார்.

திமுக தலைமையில்  ஓரங்கப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டிய திமுக துணைப்பொதுச் செயலாளரான வி.பி.துரைசாமி, கடந்த  மே மாதம் 22ந்தேதி தமிழக மாநில பாஜக தலைவர் முருகனை சந்தித்து, தமிழக பாஜகவில் இணைந்தார்.இதையடுத்து அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்திதார். அப்பபோது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றவர், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்,

தமிழகத்தில் இதுவரை, அதிமுக-திமுக இடையே போட்டிதான்  போட்டி நிலவி வந்தது, இனிமேல், அது,  பாஜக-திமுக இடையேயான போட்டியாக இருக்கும்.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து போகிறார்களோ அவர்களுடன் கூட்டணி எனவும் பேட்டியளித்தார். பாஜக தலைமையிலேயே கூட்டணி, நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார்.

ஓபிசி  இடஓதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,. ஓபிசி  இடஓதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்ம் வேளையில், வி.பி.துரைசாமியின் அதிரடி கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.