பாஜக, அதிமுகவுக்கு மாமனோ, மச்சானோ, பங்காளியோ கிடையாது: ஜெயக்குமார்

சென்னை:

பாஜக, அதிமுகவுக்கு மாமனோ, மச்சானோ, பங்காளியோ கிடையாது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

ன்று  பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளிக்க மறுத்த ஜெயக்குமார்,  இந்த தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து எதையும் கணிக்க முடியாது என்றவர்,  பாஜக, அதிமுகவுக்கு மாமனோ, மச்சானோ, பங்காளியோ கிடையாது என்று கடுமையாக சாடினார்.

நாடாளுன்ற  தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி இருக்கும் என்ற கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்லில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றவர்,  எதிர்க் கட்சிகள் என்னதான் வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என்றார்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்தபோதும் மக்கள் அதிமுகவை தான் வெற்றிபெற செய்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்