ஓராண்டில் ரூ.1000 கோடி நிதி திரட்டிய பாஜக

இந்தியாவின் பெரும்பாலான மாநிலத்தை ஆளும் பாஜக நடப்பு நிதி ஆண்டில் ஆயிரம் கோடியை தேர்தல் நிதிக்காண திரட்டியுள்ளது. கட்சியின் ஆண்டுவருமான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த போது இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

BJP

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி தங்களின் ஆண்டு வருமான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிதி குறித்த தகவலை தாக்கல் செய்து வருகின்றன.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் நிதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் தேர்தல் பணிக்காக ரூ.1000 கோடி நிதியாக பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதேபோன்று சிறிய கட்சியும் தங்கள் பங்கிற்கு நூறு கோடிகளில் நிதி திரட்டியுள்ளன.

அதன்படி பார்க்கபோனால், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.717 கோடி நிதியை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36 கோடி அதிகமாகவே உள்ளது. அதேபோல், மம்தா பேனர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் ரூ.291 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.