நாடாளுமன்ற தேர்தல்: ரூ.21 கோடிக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்ட பாஜக!

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரபல வலைதளமான கூகுள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்து வந்தன. இதில், பாஜக அதிகள அவிலான ரூபாய்க்கு விளம்பரம் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.21 கோடி அளவுக்கு விளம்பரங்கள் வெளியிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

லோக்சபா தேர்தல் காரணமாக  கடந்த 4 மாதங்களில் மட்டும் பேஸ்புக், கூகுள் போன்ற சமுக வலைதளங்களில்  அரசியல் கட்சிகள் தங்கள்  தேர்தல் விளம்பரங்களை  பிரசுரம் செய்வதற்காக  ரூ.53 கோடி செலவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் 15-ம் தேதி வரையிலான கால அளவில், தங்களது வலைதளத்தில் இந்திய அரசியல் கட்சிகள் சார்பில்  1.21 லட்சம் தேர்தல் விளம்பரங்களை வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள்  ரூ.26.5 கோடி செலவிட்டு  இருப்பதாகவும்  தெரிவித்து உள்ளது.

அதேவேளையில்,  கூகுள், யூடியூப் போன்ற வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல் கட்சிகள் ரூ.27.36 கோடி செலவிட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. மொத்தம்,  14,837 தேர்தல் விளம்பரங்கள் இதில் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளத.

இதில், அதிக அளவிலான தொகைக்கு விளம்பரம் செய்திருப்பது பாரதிய ஜனதா என்றும்,  மிக அதிக தொகையில் அதிக அளவிலான  சுமார் 2500க்கும் அதிகமான   பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

பேஸ்புக் சமூக தளத்தில் வெளியான விளம்பரங்களுக்காக  ரூ.4 கோடியும், கூகுள் குழும வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக ரூ.17 கோடியும் என மொத்தம் ரூ.21 கோடி ரூபாய் பாஜக செலவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.4,17 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி பேஸ்புக்கில்  3,686 விளம்பரங்கள் வெளியிட்டு உள்ளது. அதற்காக  ரூ.1.46 கோடி செலவிட்டுள்ளது. மேலும், கூகுள் குழும வலைதளங்களில் 425 விளம்பரங்களை வெளியிட்டு , அதற்காக செலவிட்ட தொகை ரூ.2.71 கோடி செலவிட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஆத்மி கட்சி முகநூல் விளம்பரங்களுக்காக 13.62 லட்சமும் செலவிட்டுள்ளன.
பிப்ரவரி 19-ஆம் தேதியிலிருந்து கூகுள் குழும வலைதளங்களில் விளம்பரம் செய்ய ஆம் ஆத்மி கட்சி ரூ.2.18 கோடி செலவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.29.28 லட்சம் செலவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி