களம் இறங்கினார் கவுதம் காம்பீர்….. கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் போட்டி!

டில்லி:

மீபத்தில் பாரதியஜனதா கட்சியில் இணைந்த  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர்  டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 2கட்ட கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இன்று 3வது கட்ட வாக்குப்பதிவு  கேரளா, உ.பி. உள்ள பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாஜக டெல்லி பிரதேசத்துக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,  கிழக்கு டெல்லி தொகுதியில்  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல  டெல்லி தொகுதியில் மீனாக்‌ஷி லேகி போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மாதம் 22ந்தேதி  பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போதே,  காம்பீர் டில்லி நாடாளுமன்ற தொகுதியில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அது உறுதியாகி உள்ளது.

கம்பீரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில், அரவிந்தர் சிங் லவ்லி போட்டியிடுகிறார்.