சென்னை:
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழகத்தின் சிறப்பம்சங்கள், கலாச்சார ஓவியங்கள் அனைத்தும் பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங் கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். விரிவு படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழகத்தின் சிறப்பம்சங்கள், கலாச்சார ஓவியங்கள் அனைத்தும் பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.