நெட்டிசன்
Shanmugasundaram KP முகநூல் பதிவு

“கங்கை அமரர் ஊர்தியானது ராமராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்”

பாஜக’வினரை குறிவைக்கும் குஜராத்தி கவிஞர்.
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வருவதும், அதை நாய், காகம், பருந்து உள்ளிட்ட உயிரினங்கள் கொத்தி தின்பதும் அரங்கேறி வருகிறது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது, குஜராத்தில் சென்ற ஆண்டை விட உயிரிழப்பு இருமடங்கு அதிகரித்திருக்கிறது.
குஜராத்தில் உயிருக்கு பயந்து மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், கடந்த மாத இறுதியில் மக்களை வானொலி மூலம் பாதுகாப்புடன் இருக்கச் சொல்லி பிரதமர் மோடி கூறினார், அதன் பிறகு, மக்களின் அச்சத்தை போக்க மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்துவருகிறார்.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் பருல் கக்கார், இந்தியாவில் தற்போது நிகழும் சம்பவங்கள் குறித்து “கங்கை அமரர் ஊர்தியானது” (சவ-வாஹினி கங்கை) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார், அதில் :
கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள், சடலங்கள் ஒரே குரலில் பேசுகின்றன…
அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம் என்று தொடங்கி……..,
“உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள்,
இதனால் அதனால் என்பதெல்லாம் வேண்டாம்,
வெளியே வந்து உரக்க சொல்லுங்கள்,
“நிர்வாண ராஜா பலவீனமானவர் மற்றும் இயலாதவர்
நீங்கள் இனி சாந்தகுணமுள்ளவர் அல்ல என்பதைக் காட்டுங்கள்,
தீப்பிழம்புகள் உயர்ந்து வானத்தை அடைகின்றன, நகரரெங்கும் தீபரவியது;
அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதை காண்கிறீர்களா❓
இதுவரை, பா.ஜ.க. ஆதரவு கவிஞர் என்று அறியப்பட்ட பருல் கக்கார், மோடியை விமர்சிக்கும் வகையில் இப்படி ஒரு கவிதையை எழுதி இருப்பது ஹிந்தி, ஆங்கிலம், வங்காளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தி வயர் உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாகி பா.ஜ.க. வினக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்படுத்தியுள்ளது.