டில்லி

முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசு பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார்.  அவரது பல கருத்துக்களும் மத்திய அரசு குறித்த விமர்சனங்களும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.   இந்நிலையில் மத்திய அரசு குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா, “அன்பு நண்பரே,  கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக நாம் எல்லம் கடுமையாக உழைத்தோம்.   முந்தைய ஆட்சியால் கடந்த 2004 முதலே நம்மில் பலர் கடும் துயருற்றோம்.   பாராளுமன்றத்திலும் வெளியிலும் நாம் துயருறும் போது ஒரு சிலர் தங்கள் மாநிலங்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் ஆட்சிப் பீடத்தில் இருந்தனர்.  கடந்த 2014ஆம் ஆண்டு கிடைத்த மாபெரும்  வெற்றி மூலம் நாட்டில் ஒரு புதிய மற்றும் பொற்கால அத்தியாயம் தொடங்கி விட்டதாக மகிழ்ந்தோம்.   நாட்டின் பிரதமரும் அவர் அமைச்சரவையும் நன்மை செய்யும் என்னும் நம்பிக்கையில் அவர்களை முழுமையாக ஆதரித்தோம்.

தற்போது இந்த அரசு நான்காண்டுகளை கடந்துள்ளது.   இதுவரை 5 நிதிநிலை அறிக்கைகளை அரசு அளித்துள்ளது.    நாட்டுக்கு நல்லாட்சி தரும் அனைத்து வாய்ப்புகளையும் அடைந்தது.   ஆனால் முடிவைப் பார்க்கும் போது நாம் வழி தவறியதையும் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்ததையும் அறிய முடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.