டில்லி

சிவோட்டர் என்னும் ஆய்வு நிறுவனம் எடுத்து வரும் அரசு ஆதரவு கணக்கெடுபில் பாஜக அரசுக்கான ஆதரவு ஒரே மாதத்தில் 22 புள்ளிகள் குறைந்துள்ளன.

சிவோட்டர் என்னும் ஆய்வு நிறுவனம் அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி முடிவுகளை ஒவ்வொரு மாதமும் அறிவித்து வருகிறது.   இந்த கணக்கெடுப்பில் ‘மிகவும் திருப்திஓரளவு திருப்தி, திருப்தி இல்லை, சொல்ல இயலவில்லை என நான்கு விதமான பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய மக்களிடம் கேட்கப்படுகிறது.

இந்த வருட ஆரம்பத்தில் பாஜக அரசு 32.4 புள்ளிகள் ஆதரவுடன் இருந்துள்ளது.  அதன் பிறகு 30 முதல் 40 புள்ளிகள் வரை அந்த மாத இறுதியில் அரசு பெற்றது.   அதன் பிறகு வந்த பிப்ரவரி மாத இடையில் நடந்த புல்வாமா தாக்குதலில் அரசுக்கு ஆதரவு அதிகரித்தது.

பாலகோட் தாக்குதலுக்கு பிறகு மேலும் அதிகரித்து அது மார்ச் 7 ஆம் தேதி அன்று 51.32% பேருக்கு மேல் ஆதரவு கிடைத்ததால்  புள்ளிகள் 62.06 க்கு மேல் உயர்ந்தன.   ஆனால் அதற்கு பிறகு மார்ச் 12 முதல் ஏப்ரல் 12 வரை நடந்த கண்க்கெடுப்பில் அது 12 புள்ளிகள் குறைந்து ஏப்ரல் 12 அன்று 43.25 புள்ளிகள் ஆகி உள்ளன.

ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.