கொரோனாவையும், சீனாவையும்  விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளுடன் யுத்தம் நடத்தும் பா.ஜ.க.அரசு..’’

கொரோனாவையும், சீனாவையும்  விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளுடன் யுத்தம் நடத்தும் பா.ஜ.க.அரசு..’’
காங்கிரஸ் மூத்த தலைவர், அகமது படேலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் விசாரணை மேற்கொண்டனர்.
பொதுத்துறை வங்கிகளில் ஒரு நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்கி விட்டுத் திருப்பி செலுத்தவில்லை.
இது தொடர்பாக சி.பி.ஐ.ஏற்கனவே, அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், படேலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அகமது படேலின் வயதை மனதில் வைத்து, கொரோனா பரவல் விதிகளைப் பின்பற்றி, அகமது படேலிடம் ‘ரிகார்டர்’ மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதாக சி.பி.ஐ.தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள அகமது படேல்’’ இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை’’ என்றார்.
‘’ கொரோனா வைரஸ் மற்றும் சீனாவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு, மத்திய பாரதிய ஜனதா  அரசு, இப்போது எதிர்க்கட்சிகளுடன் யுத்தம் நடத்துகிறது’’ என்றும் அகமது படேல் குற்றம் சாட்டியுள்ளார்.
-பா.பாரதி.