மத்தியில் நடைபெறுவது ‘தனி மனிதரின்’ ஆட்சி: பா.ஜ. சத்ருக்கன் சின்ஹா காட்டம்

போபால்,

த்தியில் நடைபெற்று வருவது தனி மனிதரின் ஆட்சி என்றும், கட்சியில் நடைபெறுவது இரு ராணுவ வீரர்களின் ஆட்சி என்றும், பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா காட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான்  இருந்து வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் நரசிங்பூர் எனும் இடத்தில் தொடங்க இருக்கும்  மின்திட்டத்துக்காக விவசாயிகளின் நிலத்தையும், அவர்களின் வீடுகளையும் பலவந்தமாக மத்திய பிரதேச  அரசு கையப்படுத்தி வருகிறது.

இதை எதிர்த்து அந்த பகுதி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த எம்.பி.யான சத்ருகன் சின்ஹா களத்தில் குதித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போது  மத்தியில் நடைபெற்று வரும் ஆட்சி என்பது தனி மனிதரின் (மோடி)  ஆட்சியாகவும், கட்சியில் இரு ராணுவ வீரர்களின் (மோடி, அமித் ஷா) நிர்வாகமாகவும் இருந்து வருகிறது. இதற்கு  நான் மட்டும் அல்ல பாஜகவில் உள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் அதிருப்தியாக  கருதுகிறார்கள் என்று  கூறினார்.

மேலும், தற்போதைய அமைச்சர்கள் வகிக்கும் துறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவது இல்லை என்றும்,  பெரும்பாலான அமைச்சர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் என்றும்  காட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது, எந்த முடிவு எடுப்பதானாலும்,  கட்சியிலும், ஆட்சியிலும் அனைவரிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் அந்த அரசு சிறப்பாக செயல்படடது. அப்போது பதவியில்  இருந்த அமைச்சர்களும்  அரசின் அடையாளமாக திகழ்ந்தார்கள்.” ஆனால் தற்போது அப்படி அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.