டில்லி

தவி ஏற்றது முதல் விளம்பரங்களுக்காக பாஜக அர்சு ரூ.4300 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக அரசு கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றது.   அரசு சார்பில் ஏராளமான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தெரிவித்து வந்தனர்.   இந்நிலையில் மும்பைய சேர்ந்த அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு  ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் பாஜக அரசு விளம்பரத்துக்காக 2014 ஆம் ஆண்டு முதல் செலவழித்துள்ளதாக கேள்வி எழுப்பி இருந்தார்.  இதற்கு நிதி ஆலோசகர் தபன் சூத்ரதார் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று தகவல் அறியும் சட்ட நிறுவனம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் முதல் மொத்தம் ரூ.4300 கோடி விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அத்துடன் விளம்பரங்களுக்காக அதிகத் தொகை செலவழிப்பதாக எழுந்த புகாரை ஒட்டி கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த செலவில் ரூ.300 கோடி குறைந்துள்ளதையும் இந்த பதிலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.