அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், அவர் போட்டியிட்ட தொகுதி பெயர் வேட்புமனுவில் குறிப்பிடப்படாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று வேட்புமனு வில் குறிப்பிடாத நிலையில், அவரது வேட்புமனு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் நிர்வாகி மேராமன் ஆஹர் குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ  பபுபா மானெக் (Pabubha Manek). இவர் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை தெரிவிக்கவில்லை. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவரது வேட்புமனு எவ்வாறு ஏற்கப்பட்டது… தொகுதி பெயர் குறிப்பிடாத நிலையில், அவர் போட்டியிட அனுமதித்த யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகி, மேராமன் ஆஹர் குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.