புதுடில்லி: பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு ஒரு பதிவை நீக்கியது, இது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேரணியில்,“கட்சி  நாடு முழுவதிலும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்”, என்ற கருத்தாகும்.

19ம் தேதியன்று நீக்கப்பட்ட ஏப்ரல் 11ம் தேதியிட்ட ட்வீட், “பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைத் தவிர ஒவ்வொரு ஊடுருவல்களையும் நாட்டிலிருந்து அகற்றுவோம்” என்று மேலும் கூறியுள்ளது.

ட்வீட்டின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் உள்ளது. பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியாவை TOI அணுகியது, ஆனால் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஆயினும், மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது ஷா ஆற்றிய உரையை நேரலையில் ட்வீட் செய்த கட்சி கணக்கின் இடுகை, மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்த கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் என்ற மற்ற மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வருகிறார்கள் என்ற உண்மையை பிரதிபலிக்கவில்லை என்று பாஜக வட்டாரங்கள் விளக்கின.

“ஷாவின் உரையின் ஒரு பகுதி, நேரடியாக ட்வீட் செய்யப்பட்டு, ஒரு பகுதியால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதன் காரணமாக அந்த ட்வீட் நீக்கப்பட்டது”, என்று ஒரு கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன் ட்வீட் செய்ததாவது, “பாஜக ஐடி செல் ட்வீட்டை நீக்க முடியும். ஆனால் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் ‘நாங்கள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஆர்.சி.யை வெளியிடுவோம்’ என்று கூறியதை அவர்களால் நீக்க முடியாது.

எவ்வாறாயினும், ட்வீட்டை நீக்குதல் என்.ஆர்.சி பற்றி மறுபரிசீலனை செய்வதால் அல்ல என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. “எதிர்ப்பாளர்கள் தங்களை மகிழ்ச்சி படுத்திக் கொள்வதற்காக தவறான முடிவுக்கு வர அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது,” என்று ஒரு செயல்பாட்டாளர் கூறினார்,