பாஜகவின் அணுகுமுறை முஸ்லீம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக உள்ளது – இம்ரான் கான்

இஸ்லமாபாத்:

ந்தியாவில், ஆளும் கட்சியான பாஜகவின் அணுகுமுறை முஸ்லிம்களுக்கு விரோதமாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற பின், முதல் முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ என்ற பிரபல பத்திரிகைக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில்,

வரும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், சமாதானத்திற்கான தனது தொடர்ச்சியான அழைப்புகளை இந்தியா நிராகரித்தது என்றார். மேலும், தற்போது ஆளும் பாஜக கட்சி முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான அணுகுமுறையை கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

பின்னர், இந்தியாவில் தேர்தல்கள் முடிந்தவுடன், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தொடர முடியும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கார்டர்பூரின் நடைபாதை பற்றி பேசிய இம்ரான் கான், இந்திய சீக்கியர்கள் எந்த சிரமும் இன்றி கார்டர்பூர் சாஹிப் குருத்வாராவிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கார்டர்பூர் எல்லையைத் திறந்ததாகவும் இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், கார்டர்பூர் எல்லை திறப்பிற்கு இந்திய ஊடகங்கள் அரசியல் நிறத்தை கொடுத்து, அது ஒருவித அரசியல் ஆதாயத்திற்காக செய்தது போலவே சித்தரிப்பது துரதிஷ்டவசமானது. இது உண்மை இல்லை என்றும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்பின் அறிக்கையின் பகுதியாக இருப்பதால் இதை அவர் செய்ததாகவும் தெளிவு படுத்தினர்.

மும்பை குண்டுவீச்சாளர்களைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்றும், “அது ஒரு பயங்கரவாத செயலாகும் என்பதால் அந்த வழக்கை விரைவில் தீர்ப்பது எங்கள் விருப்பம்,” என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

கடந்த 2008ம் ஆண்கடல் வழியாக பத்து பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி 166 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை கொன்றனர். இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒன்பது பேரை சுட்டுக் கொன்றதுடன், கைப்பற்றப்பட்ட பத்தாவது நபரை தூக்கிலிட்டு கொன்றனர்.