பாஜகவிடம் கட்சியில் சேர்பவர்களைச் சுத்தம் செய்ய வாஷிங் மெஷின் உள்ளது : மத்திய அமைச்சர்.

ல்னா, மகாராஷ்டிரா

பாஜகவில் சேர்பவர்களைச் சுத்தம் செய்த பிறகு சேர்த்துக் கொள்வதாக மத்திய அமைச்சர் ராவ்சாகிப் தான்வே பாட்டில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராவ்சாகிப் தான்வே பாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மகாராஷ்டிராவின் ஜால்னா தொகுதியின்  மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் இரு தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று தனது தொகுதியில் நடந்த ஒரு விழாவை ராவ் சாகிப் தான்வே பாட்டில் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “பாஜக விடம்  ஒரு வாஷிங் மெஷினுள்ளது. பாஜக்விலிணைய வருபவர்களை முதலில் அந்த இயந்திரத்தில் போட்டு துணியைத் துவைப்பது போல் நன்கு சுத்தம் செய்து அதன் பிறகு கட்சியில் இணைப்போம். அவர்களைச் சுத்தம் செய்ய எங்களிடம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மா பவுடர் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் மோடி ஆகியோரைப் பற்றிக்  கூறுகிறார் என்பதைப் பலரும் அறிந்துக் கொண்டுள்ளனர். அவர் அதற்கேற்றாற்போல் குஜராத்தைச் சேர்ந்த நிர்மா பவுடர் எனக் குறிப்பிட்டுள்ளார். மோடி மற்றும் அமித்ஷா இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.