‘’எங்கள் கட்சியின் தொண்டர்கள் மனதில் பா.ஜ.க..விஷம் விதைக்கிறது’’ தேவகவுடா மகன் குற்றச்சாட்டு..

‘’எங்கள் கட்சியின் தொண்டர்கள் மனதில் பா.ஜ.க..விஷம் விதைக்கிறது’’ தேவகவுடா மகன் குற்றச்சாட்டு..

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க..வில் ஐக்கியமாகப் போவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதனை மறுத்து தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் காரசாரமாக எழுதியுள்ளார்.

’’எங்கள் கட்சி பா.ஜ.க..வில் இணையப்போவதாகவும், நான் மத்திய அமைச்சராகப்போவதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மை அல்ல. இது போன்ற வதந்திகளை பா.ஜக. தான் பரப்பி வருகிறது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

’’மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அடித்தளத்தைத் தகர்க்கும் நோக்கத்துடன், எங்கள் கட்சி தொண்டர்கள் மனதில் விஷம் விதைக்கும் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

‘’கர்நாடக மாநில பா.ஜ.க.தலைவர்களைக் காட்டிலும் பிரதமர் மோடியிடம் தனக்கு நட்பு உள்ளது- முதல்வர் எடியூரப்பாவின் வயதை மதிக்கிறேன்’’ எனக் கூறியுள்ள குமாரசாமி’’ அந்த நட்பையும், மரியாதையையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்’’ என பா.ஜ.க.வை எச்சரித்துள்ளார்.

-பா.பாரதி.