டில்லி

பாஜக தனது எதிர்மறை அரசியலால் டில்லி மாநிலத்தில் இருந்து அடியோடு நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லி முன்னேற்றக் குழுமத்தின் சார்பில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், ”டில்லியில் மத்திய அரசின் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தாமல் உள்ளதால் மக்களுக்கு அந்த திட்டங்களின் பயன்கள் போய்ச் சேரவில்லை  பிரதமர் வீட்டு வசதி திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கெஜ்ரிவாலின் பெயர் இடம் பெறாததால் அவர் அமல்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சதா, “ஆம் ஆத்மி அரசு டில்லி மக்களுக்கு ஏற்கனவே பல நலத்திட்டங்களை நடத்தி வருகிறது.  ஆனால் பாஜக அரசு திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடத்தி மக்களை துயருற செய்தது.   அடுத்தது ஜிஎஸ்டி மூலம் மக்களை மேலும் துன்புறுத்தி உள்ளது.

இத்தகையை எதிர்மறை அரசியலால் டில்லியின் அடித்தள மக்களிடையே பாஜக முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.  பாஜகவால்  உலகெங்கும் இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைப் பற்றி மட்டுமின்றி  நாட்டில் நடைபெறும் விவகாரம் குறித்தும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை.

அமைச்சர் அமித்ஷாவின் உரை மூலம் டில்லி மக்களிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருக்கும் மதிப்பு குறித்து பாஜகவுக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

கடந்த 2015 ஆம் வருடத் தேர்தலில் இருந்து தங்களுக்கு டில்லி மக்களின் ஆதரவு இல்லை என்பதை உணராமல் அக்கட்சி ஏதேதோ பேசி வருகிறது.  வரும் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் தாங்கள் டில்லியில் அடியோடு துடைக்கப்பட்டுள்ளதை பாஜகவினர் அறிந்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.