பெங்களூரு

ர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு உண்டாகலாம் என கூறப்படுகிறது.

 

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் கர்நாடகாவில் 14 தொகுதிகளில் ஏப்ரல் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.   இவை உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சின கன்னடா, சித்திரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூர் புறநகர், தெற்கு பெங்களூர், வடக்கு பெங்களூர், மத்திய பெங்களூர், சிக்கபாலபூர் மற்றும் கோலார் தொகுதிகள் ஆகும்.

கர்நாடகாவில் இந்த முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் மஜத 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.   பாஜக 13 தொகுதிகளிலும் மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு ஆதரவும் அளித்துள்ளது.  சுமலதா இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டி இடுகிறார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ரவி கவுடா, “கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத தனித்தனியே போட்டி இட்டன.  அப்போது இரு கட்சிகள் பெற்ற வாக்குகளை இணைத்தால் 56.3% ஆகும்.   அதே நேரத்தில் பாஜக 36.2% மட்டுமே பெற்றிருந்தது.    எனவே காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு வெற்றி வாய்புக்கள் அதிகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மஜத கட்சியினர் தும்கூர் தொகுதில் மஜதவின் தேவே கவுடா, மற்றும் ஹாசன் தொகுதியில் பிரஜால் ரேவண்ணா,  மாண்டியாவில் நிகில் குமாரசாமி ஆகியோர் போட்டி இடுகின்றனர்.   பிரஜால் மற்றும் நிகில் இருவரும் தேவே கவுடாவின் பேரன்கள் ஆவார்கள்.  உடுப்பி –  சிக்மகளூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பிரமோத் மாதவராஜ் போட்டி இடுகிறார்.

காங்கிரஸ் கட்சி பெங்களூர் புற்நகர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, சிக்கபாலபூர், மற்றும் கோலார் தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற கட்சியாகும்.  இந்த தொகுதிகளை அக்கட்சி தக்க வைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.