ஏக்நாத் காட்சே

நாக்பூர்

ர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வராத அமைச்சருக்கு முன்னாள் அமைச்சருக்கு பாஜக தலைமை அலுவலகம் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில பாஜக அரசில் அமைச்சராக பணி புரிந்தவர் ஏக்நாத் காட்சே.   மகாராஷ்டிரா மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் காட்சேவும் ஒருவர்.   இவர் மீது நில ஊழல் வழக்கு ஒன்று உள்ளதால் இவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மறுத்துள்ளார்.

நாக்பூரில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தின் வருடா வருடம் பாஜக உறுப்பினர்கள் வருவது வழக்கம்.   அப்போது காட்சேவும் மற்றொரு உறுப்பினரான ஆஷிஷ் தேஷ்முக் என்பவரும் வரவில்லை.    காட்சே சட்டமன்றக் கூட்டத்துக்கும் வரவில்லை.   அதே நேரத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தாம் நில ஊழல் வழக்கு பொய்யானது என நிரூபித்து அதிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் தேஷ்முக்

மற்றொரு உறுப்பினரான ஆஷிஷ் தேஷ்முக்  ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வராதது மட்டுமின்றி தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவாருடன் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டது பாஜக வட்டாரத்தில் பரபரப்பு எற்படுத்தி உள்ளது.   மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவின் தலைமைக் கொறடாவாக உள்ள ராஜ் புரோகித் இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

அதில் “மற்றவர்கள் வழக்கமாக ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வரும்போது நீங்கள் இருவர் மட்டும் வராதது ஏன்?  உடனடியாக விளக்கம் தேவை” எனக் கேட்கப்பட்டுள்ளது.   இதற்கு தேஷ்முக் பதிலாளிகாத நிலையில் காட்சே, “எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு செல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.   அதே வேளையில் தான் அவர் தொலைக்காட்சி பேட்டியில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.