காஷ்மீர் துணை முதல்வராக பாஜக கவிந்தர் குப்தா தேர்வு….நிர்மல்சிங் திடீர் ராஜினாமா

ஸ்ரீநகர்:

பாஜக.வை சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக கவிந்தர் குப்தா புதிய துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கவிந்தர் குப்தா

காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காதுவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடந்தது. இதில் மாநில பாஜக அமைச்சர்கள் கலந்துகொண்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

நிர்மல் சிங்

இதையடுத்து இந்த பேரணியில் கலந்து கொண்ட இரு அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். ஒரு சில நாட்களில் மேலும் சில பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் துணை முதல்வராக இருந்த பாஜக.வை சேர்ந்த நிர்மல் சிங் இன்று ராஜினாமா செய்துள்ளனர். அவருக்கு பதிலாக பாஜக.வை சேர்ந்த கவிந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.