தேர்தல் பத்திர திட்டம் குறித்து பாஜகவுக்கு முன்பே தெரியும் : புதிய தகவல்

டில்லி

தேர்தல் பத்திர திட்டம் குறித்து பாஜகவுக்கு முன்பே தெரியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்க விரும்புவோர் தங்களின் விவரங்கள் வெளியில் தெரிவதை விரும்பவில்லை என்பதால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.   கடந்த வருடம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இது குறித்த விவரங்கள் ஏற்கனவே பாஜகவுக்கு தெரியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேடி அன்று நிதி அமைச்சகம் பிரதமர் மோடியிடம் தேர்தல் பத்திர திட்டம் குறித்த இறுதி வரைவை வழங்கியது.   ஆனால் தகவல் அறியும் சட்டத்தின்படி கிடைத்துள்ள தகவலின்படி பாஜக பொதுச் செயலர் பூபேந்திர யாதவ் இந்த திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை ஒரு கோரிக்கை மனுவாக நிதி அமைச்சகத்துக்கு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.  குறிப்பாக இந்த திட்டம் குறித்து அனைத்து கட்சிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்ட போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதை அனுமதிக்கவில்லை.  அப்போது பாஜக அளித்த அம்சங்களில் ஒன்றான நிதி அளிப்போர் விவரங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதை அமைச்சகம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் அந்த கோரிக்கை மனுவில் வங்கிகள் நிதி அளிப்போர் விவரங்களை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்துள்ளதால் இந்த திட்டத்தில் ரகசியத் தன்மை இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   இந்த வரிகளின் மூலம் பாஜக இந்த திட்டம் குறித்து ஏற்கனவே அறிந்துள்ளது என்பது தெளிவாகி உள்ளது.   அத்துடன் இந்த பத்திரங்கள் ரு.2000, ரூ.500 மற்றும் ரூ.10000 மதிப்பில் வெளியிட உள்ள நிலையில் அதிக மதிப்புள்ள பத்திரங்களும் வங்கிகள் அளிக்க வேண்டும் எனக் கூறி உள்ளது பாஜகவுக்கு இது குறித்துத் தெரியும் என்பதை மேலும் நிரூபித்துள்ளது.

Thanx : The wire

You may have missed