இளம் பெண்ணிடம் எசகுபிசகாக சிக்கிய குஜராத் பாஜக எம்பி!

BJP Lawmaker KC Patel Says Honey-Trapped, Accuses Supreme Court Lawyer

 

டெல்லி: பாஜக மக்களவை எம்.பி.,யை மயக்கி, ஆபாச படம் எடுத்து பெரும் தொகை கேட்டு மிரட்டிய இளம்பெண்ணை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குஜராத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினரான கே.சி டெல்லி காவல்துறையில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், “இளம் பெண் ஒருவர் உதவி கேட்டு என்னை நாடினார். பிறகு காசியாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மயக்கமருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை எனக்கு அளித்தார். இது தெரியாமல் நான் குளிர்பாணத்தைக் குடித்து மயங்கிவிட்டேன். நான் நினைவு திரும்பி எழுந்த போது, ஐந்து கோடி ரூபாய் கேட்டு அவர் மிரட்டினார். அந்த பெண்ணுடன் மேலும் சிலரும் மிரட்டினர். நான் பணம் தராவிட்டால் என்னை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடப்போவதாக மிரட்டுகின்றனர். மேலும் காவல்துறையில் என் மீது பொய் புகார் அளிப்போம் என்றும் மிரட்டுகிறார்கள்” என்று கூறியுள்ளார். எம்.பி., ஒருவர் இப்படிப்பட்ட புகார் அளித்து இருப்பதை டெல்லி சிறப்பு கமிஷனர் முகேஷ் மீனாவும் உறுதி செய்துள்ளார். எம்.பி. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். அப்பெண் கடந்த ஆண்டு இதேபோல், வேறு ஒரு எம்.பி., மீது காவல்துறையில் பொய் புகார் அளிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். பாஜக எம்பி கே.சி படேலை இளம்பெண்ணை மிரட்டியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், அப்பெண்ணைப் பிடிப்பதற்காக தனிப்படையும் அமைத்துள்ளனர்.

இதனிடையே, பாஜக எம்பியை மிரட்டியது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 3ம்தேதி கே.சி.படேலை உச்சநீதிமன்றத்தில் தாம் சந்தித்ததாகவும். அதன் பின்னர் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். பாஜக எம்பி கே.சி.படேல் தம்மை பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் பெண் போலீசாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

You may have missed