மாட்டுக்கறி தடையை தொடர்ந்து மற்றோர் உணவுக்கும் தடையா?

டில்லி

பிஜேபி கட்சியின் சட்டவல்லுனர் ரமேஷ் அரோரா வட இந்தியத் தெருக்களில் பரவலாக விற்கப்படும் மோமோ என்னும் உணவைத் தடைசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்

மோமோ என்பது இந்தியத் தெருவோர உணவுக்கடைகளில் விற்கப்படும் ஒருவகை உணவு.

இந்த உணவு திபெத், மற்றும் நேபாள நாடுகளில் மிக பிரபலமான ஒரு வகை உணவு..

மைதா மாவைக்கொண்டு இது செய்யப்படுகிறது

இதில் மாமிசம் அல்லது காய்கறிகள் பின் சேர்க்கப்படுகிறது

இந்த மோமோவை தடை செய்ய வேண்டும் என அரோரா தனது ட்விட்டர் பக்கத்தில் கோரியுள்ளார்

இதில் கலக்கப்படும் சில பொருட்கள் உடலுக்கு தீங்கையும், இந்த உணவின் மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் தன்மையும் கொண்டவை என அரோரா குறிப்பிட்டுள்ளார்.

இதில் வேறு ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அஞ்சுகிறார் அரோரா.

மேலும், இந்த தடைக்காக அரோரா ஜம்முவில் உள்ள வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் உணவுத்துறை கட்டுப்பாடு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க இருக்கிறார்.

அரோரா ஏற்கனவே அஜினோமோட்டோ சேர்க்கப்படும் உணவுகள் விஷத்துக்கு ஈடானவை என்றும், விஷ உணவுகள் விற்பதை யாரும் விரும்ப மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்,

பலரும் விரும்பி உண்பதால் எந்த ஒரு உணவும் நல்லதாக ஆகிவிடாது எனவும் அரோரா கூறுகிறார்.

மோமோ விற்பனையில் பர்மியர்களும், பங்களாதேஷிகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜேபி ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு உணவுக்கும் தடை விதிப்பதோ, அல்லது தடை கோருவதோ தொடர்ந்து வருகிறது என பலரும் ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

.

,