மத்திய பிரதேசம்: சட்டமன்றத்தில் பாஜக பெண் எம்எல்ஏ கதறி அழுகை…கட்சி தலைவர்கள் மீது புகார்

போபால்:

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அங்கு சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிமாரியா தொகுதி பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ. நீலம் அபய் மிஷ்ரா இன்று சட்டமன்ற பூஜ்ஜிய நேரத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் தொல்லை கொடுக்கின்றனர். பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் அபய் மிஷ்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

பெண் எம்.எல்.ஏ.வுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர். அபய் மிஷ்ராவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். இதனால் சட்டமன்ற நடவடிக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.