Random image

பெரியார் சிலை மீது காலணி வீசிய  பாஜக வழக்கறிஞர் கைது

பெரியார் சிலை மீது காலணி வீசிய பாஜகவைச் சேரந்த வழக்கறிஞர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை, பெண் விடுதலைக்காக போராடியவருமான தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று(திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சமூகவிழிப்புணர்வு நிகழ்வுகள் பல நடந்துவருகின்றன.

இந்நிலையில் சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்  அங்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (வயது 35) என்பவர், திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ந்தனர்.

இதையடுத்து ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் வசிக்கிறார். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜெகதீசனிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.