காற்றில் பறக்கும் பாஜகவின் மானம்: ரூ.1கோடி பரிசு அறிவித்த பிரமுகர் எஸ்கேப்….!

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் தமிழக பாஜக பிரமுகர் ஒருவர் சவால் விடுத்த நிலையில், அது தொடர்பான ஆவனங்களை கொடுக்க முனைந்தால், அவர் எஸ்கேப்பாகி விடுவதாக கூறப்படுகிறது…

இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது…பாஜகவின் யோக்கியதை இதுதானா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது….

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலை யில், தமிழகத்திலும் இஸ்லாமியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  CAA-சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு  என நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளர், குமாரப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.தங்கவேல் என்பவர்  தமிழகம் முழுவதும்  சுவரொட்டி விளம்பரம் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பலர் அநத  சுவரொட் டியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அவருடன் பேசியுள்ளனர். அதுபோல  வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் தொடர்பு கொண்டு ஆவணத்தை கொண்டு வருகிறேன் என்று கூறியபோது, ஆவணங்களை வாட்ஸ்அப்பில் மட்டுமே அனுப்ப வேண்டும், அதை ஆய்வு செய்தபிறகே கூற முடியும் என்று சல்ஜாப்பு கூறி, யாரையும் சந்திக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஏராளமானோர் பாஜக நபர் அறிவித்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு வரும் நிலையில்,பாஜக வழக்குரைஞர் தங்கவேல் எஸ்கேப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது….

இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோடி பரிசு தருவோம் என்று கூறி அலப்பறை செய்துவிட்டு, தற்போது சரியான பதில் தெரிவிக்க மறுத்து  துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தலைதெறிக்க ஓடுவது… பாஜகவின் யோக்கியதையை பறைசாற்றி வருகிறது….

பாரதிய ஜனதா கட்சியின் மானம் காற்றில்  பறக்கிறது… தேவையா  Mr. தங்கவேல்…..?