டெல்லி: மகாராஷ்டிர அரசியலில், வாரிசு அடிப்படையில் 16 எம்எல்ஏகள் வெற்றி பெற்று, அதிக அரசியல் வாரிகளை கொண்ட கட்சி என்ற பெயரை பெற்றிருக்கிறது பாஜக.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியும், அரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடனும் பாஜக ஆட்சியில் அமர்கிறது.

முடிவுகள் பற்றி பல கருத்துகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அதிக அரசியல் வாரிகளை எம்எல்ஏக்களாக பெற்ற கட்சி பாஜக என்பது தான்.

இரு மாநில அரசியல்களும் இந்த நிலைமை காணப்படுகிறது. மொத்தமாக 29 பேர் அரசியல் வாரிகள் என்ற புள்ளியில் களம் இறங்கினர். போட்டியிட்ட 29 பேரில், 16 பேர் மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ளனர்.

அரியானாவில் 2 பேர் போட்டியிட்டு, அவர்களில் ஒருவர் வாகை சூடியிருக்கிறார். பாஜகவில் உள்ள அரசியல் வாரிகளில் இது 58.62 சதவீதமாக இருக்கிறது. காங்கிரசும் இந்த பார்முலாவில் இருந்து மாறவில்லை.

மகாராஷ்ரா, அரியானா மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் வாரிசுகள் போட்டியிட்டனர். 14 பேர் மகாராஷ்டராவிலும், 7 பேர் அரியானாவிலும் எம்எல்ஏக்களாக வென்றனர். அதாவது சதவீத அடிப்படையில் பாஜகவை விட சற்றே குறைந்து 58.33 ஆகும்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும், வாரிசு அரசியல் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது. போட்டியிட்ட 15 பேரில் 10 பேருக்கு ஜெயம் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 91 பேர் அரசியல் பின்புலம் கொண்ட, வாரிசுகளின் அடிப்படையில் போட்டியிட்டு, 54 பேர் அதில் வென்றிருக்கின்றனர். 59.3 சதவீதம் வெற்றி விகிதமாகும்.

சிவசேனாவின் விகிதம் தான் இதில் குறைவு. 13 பேர் களமாடி, 5 பேர் வென்று இருக்கின்றனர். பாஜக போட்டியிட்ட 164 தொகுதிகளில் வாரிசுகள்படி பார்த்தால் 27 பேர் களத்தில் இறங்கினர்.